கொல்லாமை
325நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை.

உலகியல்  நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும் விடக்
கொலையை     வெறுத்துக்      கொல்லாமையைக்    கடைப்பிடிப்பவரே
சிறந்தவராவார்.