துறவு
348தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

அரைகுறையாக   இல்லாமல்   அனைத்தும்  துறந்தவர்களே  உயர்ந்த
நிலையை  அடைவார்கள்: அவ்வாறு  துறவாதவர்கள்  அறியாமையென்னும்
வலையில் சிக்கியவர்களாவார்கள்.