அறன்வலியுறுத்தல்.
36அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.

பிறகு  பார்த்துக்கொள்ளலாம்   என்று  நாள்  கடத்தாமல் அறவழியை
மேற்கொண்டால்   அது   ஒருவர்   இறந்தபின்  கூட  அழியாப் புகழாய்
நிலைத்துத் துணை நிற்கும்.