குறள் முதற்குறிப்பு அகரவரிசை
மெய்யுணர்தல்
360
காமம் வெகுளி மயக்க மிவைமூன்றி
னாமங் கெடக்கெடு நோய்.
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை
நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.