அவா அறுத்தல்
363வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்.

தீமை  விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப்
போன்ற  செல்வம்  இங்கு  எதுவுமில்லை; வேறு எங்கும் கூட  அத்தகைய
ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.