அவா அறுத்தல்
366அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா.

ஒருவரை   வஞ்சித்துக்    கெடுப்பதற்குக்    காரணமாக    இருப்பது
ஆசையேயாகும்.   எனவே,   ஆசைக்கு  அடிமையாகக்   கூடாது  என்ற
அச்சத்துடன் வாழ வேண்டும்.