அவா அறுத்தல்
368அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்.

ஆசை  இல்லாதவர்களுக்குத்  துன்பம்  இல்லை. ஆசை உண்டானால்,
அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.