ஊழ்
374இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

உலகின்   இயற்கை    நிலை    இரு    வேறுபட்டதாகும்.   ஒருவர்
செல்வமுடையவராகவும்,   ஒருவர்  அறிவுடையவராகவும் இருப்பதே அந்த
வேறுபாடாகும்.