ஊழ்
375நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

நல்ல  செயல்களை ஆற்ற முற்படும்போது அவை  தீமையில்   போய்
முடிந்துவிடுவதும்,  தீய  செயல்களை  ஆற்றிட  முனையும்போது  அவை
நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.