ஊழ்
376பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம.

தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும்
அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு
போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.