அறன்வலியுறுத்தல்.
38வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

பயனற்றதாக   ஒருநாள்கூடக்   கழிந்து   போகாமல்,     தொடர்ந்து
நற்செயல்களில்  ஈடுபடுபவருக்கு    வாழ்க்கைப்   பாதையைச்    சீராக்கி
அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.