இறைமாட்சி
385இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

முறையாக  நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான
வருவாயைப்    பெருக்கி,  அதைப்      பாதுகாத்துத்      திட்டமிட்டுச்
செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.