கல்வி
392எண்ணென்ப வேனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.

எண்ணும்   எழுத்தும்  எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே,
உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.