கல்வி
399தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தமக்கு  இன்பம்  தருகின்ற   கல்வியறிவு   உலகத்தாருக்கும்  இன்பம்
தருவதைக்   கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும்   பலவற்றைக்    கற்றிட
விரும்புவார்கள்.