கல்லாமை
401அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

நிறைந்த  அறிவாற்றல்  இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான
கட்டம்  போட்டுக்   கொள்ளாமலே   சொக்கட்டான்   விளையாடுவதைப்
போன்றதாகும்.