கல்லாமை
404கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும்
கொள்ளார் ரறிவுடை யார்.

கல்வி  கற்காதவனுக்கு  இயற்கையாகவே   அறிவு    இருந்தாலும்கூட,
அவனைக் கல்வியில்  சிறந்தோன்  என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள
மாட்டார்கள்.