கேள்வி
420செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
ளவியினும் வாழினு மென்.

செவிச்சுவை  உணராமல்  வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள்
உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.