அறிவுடைமை
422சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.

மனம்  போகும்  வழியெல்லாம்  போக   விடாமல்   தீய வழிகளைத்
தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.