குற்றங்கடிதல்
433தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

பழிக்கு   நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக்
கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.