இல்வாழ்க்கை
44பழியஞ்சிப் பாத்தூ னுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.

பழிக்கு  அஞ்சாமல்   சேர்ந்த  பொருள்  கணக்கின்றி    இருப்பினும்
அதைவிட, பழிக்கு  அஞ்சிச்   சேர்த்தபொருளைப்   பகுத்து   உண்ணும்
பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.