குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பெரியாரைத் துணைக்கோடல்
442
உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல
பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.