பெரியாரைத் துணைக்கோடல்
449முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி  நிற்கக்  கூடிய
துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில்  வருவாய்
இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.