பெரியாரைத் துணைக்கோடல்
450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடின்.

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத்
தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.