சிற்றினஞ் சேராமை
451சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெரியோர்,  கீழ்மக்களின்  கூட்டத்தோடு  சேரமாட்டார்கள்.  ஆனால்
சிறியோர்களோ   இனம்  இனத்தோடு  சேருமென்பதுபோல்  அந்தக்  கீழ்
மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.