சிற்றினஞ் சேராமை
452நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தினியல்ப தாகு மறிவு.

சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு  அந்த  நிலத்தின்
தன்மையை   அடைந்துவிடும்.  அதுபோல  மக்களின்   அறிவும், தாங்கள்
சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.