சிற்றினஞ் சேராமை
460நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்.

நல்ல  இனத்தைக்  காட்டிலும்  துணையாக இருப்பதும், தீய இனத்தைக்
காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.