வலியறிதல்
476நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.

தன்னைப்  பற்றி  அதிகமாகக்  கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை
மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு  மேலும்  ஏறிட
முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.