குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வலியறிதல்
477
ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச்
சீராகக் காத்து வாழும் வழியாகும்.