காலமறிதல்
481பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பகல்  நேரமாக  இருந்தால்   கோட்டானைக்  காக்கை வென்று விடும்.
எனவே   எதிரியை   வீழ்த்துவதற்கு   ஏற்ற  காலத்தைத்  தேர்ந்தெடுக்க
வேண்டும்.