இடனறிதல்
499சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
ருறைநிலத்தோ டொட்ட லரிது.

பாதுகாப்புக்கான   கோட்டையும், மற்றும் பல   படைச்   சிறப்புகளும்
இல்லாதிருப்பினும்,    அப்பகைவர்   வாழும்   நிலையான   இடத்திற்குப்
படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.