தெரிந்து தெளிதல்
503அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு.

அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும்  அற்றவர்  என்றும்
புகழப்படுவோரைக்கூட ஆழமாக  ஆராய்ந்து  பார்க்கும்போது  அவரிடம்
அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து விட இயலாது.