தெரிந்து தெளிதல்
510தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்.

ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து
தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட  பின்  அவரைச்  சந்தேகப்படுவதும் தீராத
துன்பத்தைத் தரும்.