தெரிந்து வினையாடல்
516செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.

செயலாற்ற  வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும்
ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.