தெரிந்து வினையாடல்
518வினைக்குரிமை நாடிய பின்றை யவனை
யதற்குரிய னாகச் செயல்.

ஒரு  செயலில்  ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த
பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.