செங்கோன்மை
550கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.

கொலை   முதலிய     கொடுமைகள்    புரிவோரை,    ஓர்   அரசு
தண்டனைக்குள்ளாக்குவது   பயிரின்    செழிப்புக்காகக்   களை எடுப்பது
போன்றதாகும்.