கொடுங்கோன்மை
559முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யெல்லாது வானம் பெயல்.

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில்  நீரைத்  தேக்கிப்  பயனளிக்கும்
இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும்  மழையைத் தேக்கி
வைத்து வளம் பெறவும் இயலாது.