வெருவந்த செய்யாமை
562கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்.

குற்றங்கள்   நிகழாமல்   இருக்கக்  கண்டிக்கும்போது கடுமை காட்டித்,
தண்டிக்கும்    போது    மென்மை   காட்டுகிறவர்களின் செல்வாக்குதான்
தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.