குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வாழ்க்கைத் துணைநலம்
57
சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை
அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.