ஊக்கமுடைமை
600உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு.

மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில்  மனிதர்களாகக்
காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.