ஆள்வினையுடைமை
620ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்.

"ஊழ்" என்பது வெல்ல முடியாத ஒன்று  என்பார்கள். சோர்வில்லாமல்
முயற்சி   மேற்கொள்பவர்கள்  அந்த  ஊழையும்   தோல்வி    அடையச்
செய்வார்கள்.