அமைச்சு
632வன்கண் குடிகாத்தல்கற்றுஅறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.

அமைச்சரவை    என்பது,  துணிவுடன்  செயல்படுதல்,    குடிகளைப்
பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட  அறிதல்,  அயராத
முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.