அமைச்சு
634தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு.

ஒரு     செயலைத்    தேர்ந்தெடுத்தலும்,  அதனை    நிறைவேற்றிட
வழிவகைகளை ஆராய்ந்து  ஈடுபடுதலும்,   முடிவு  எதுவாயினும்  அதனை
உறுதிபடச் சொல்லும்   ஆற்றல்   படைத்திருத்தலும்   அமைச்சருக்குரிய
சிறப்பாகும்.