சொல்வன்மை
650இணரூழ்த்தும் நாறாமலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார்.

கற்றதைப் பிறர் உணர்ந்து  கொள்ளும்  வகையில்  விளக்கிச்  சொல்ல
முடியாதவர்,   கொத்தாக   மலர்ந்திருந்தாலும்   மணம்  கமழாத மலரைப்
போன்றவர்.