வினைத்துய்மை
655எற்றென் றிரங்குவசெய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று.

‘என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய
காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால்   அப்படிச்  செய்து   விட்டாலும்
அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.