வினைத்திட்பம்
662ஊறொரா லுற்றபி னொல்காமையிவ்விரண்டி
னாறென்ப ராய்ந்தவர் கோள்.

இடையூறு  வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து
விடுமேயானால்  மனம்   தளராது   இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே
அறிவுடையோர் கொள்கையாம்.