வினைசெயல்வகை
674வினைபகை யென்றிரண்டினெச்ச நினையுங்காற்
றீயெச்சம் போலத் தெறும்.

ஏற்ற  செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக  முடிக்காமல்
விட்டுவிட்டால் அது நெருப்பை அரை  குறையாக  அணைத்தது  போலக்
கேடு விளைவிக்கும்.