வினைசெயல்வகை
675பொருள்கருவி காலம்வினையிடனோ டைந்து
மிருடீர வெண்ணிச் செயல்.

ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள்,
ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப்  போகும்  செயல்முறை,  உகந்த இடம்
ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.