தூது
686கற்றுக்கண் ணஞ்சான்செலச்சொல்லிக் காலத்தாற்
றக்க தறிவதாந் தூது.

கற்றறிவாளனாகவும்,      பகைவரின்     கனல்கக்கும்    பார்வைக்கு
அஞ்சாதவனாகவும்,  உள்ளத்தில்  பதியுமாறு  உரைப்பவனாகவும்,   உரிய
நேரத்தில்  உணரவேண்டியதை  உணர்ந்து கொள்வபனாகவும் இருப்பவனே
சிறந்த தூதனாவான்.