தூது
690இறுதி பயப்பினு மெஞ்சாதிறைவற்
குறுதி பயப்பதாந் தூது.

தனக்கு   அழிவே   தருவதாக  இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து
விடாமல்   உறுதியுடன்   கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு
நம்பிக்கையான தூதனாவான்.