மன்னரைச் சேர்ந்தொழுகல்
693போற்றி னரியவை போற்றல்கடுத்தபின்
றேற்றுதல் யார்க்கு மரிது.

தமக்கு   மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து   தம்மைக் காத்துக் கொள்ள
விரும்புகிறவர்கள், பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல்
இருக்கவேண்டும்.   அப்படிச்   செய்து விட்டால் அதன்  பிறகு  தம் மீது
ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.